வங்கக்கடலில் காற்றழுத்தம்.. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதால் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதால் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா அருகே தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 8 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாரில் தலா 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 2 செ.மீ.,மற்றும் நடுவட்டம் பகுதியில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications