கோவையில் கடும் தண்ணீர் பஞ்சம்... அமைச்சர் வேலுமணியை முற்றைகையிட்ட மக்கள்
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் தண்ணீர் கேட்டு முற்றுகையிட்டனர்.
கோவை: கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் வேலுமணி, கோவை அருகேயுள்ள கோவைப்புதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்றிருந்தார். அப்போது, அப்பகுதி வாழ் மக்கள் அமைச்சரை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அமைச்சரிடம்,''நாங்கள் இங்கு வெற்றிலைக்கார வீதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் உப்புத் தண்ணீர் விநியோகம் கூட சரியாக இல்லை.

உப்புத் தண்ணீர் கூட கிடைக்காவிட்டால் நாங்கள் எப்படித்தன் வாழ முடியும்? நாங்கள் அதிகாரிகளிடம் எத்தனை முறை இதுகுறித்துக் கேட்டாலும் அவர்கள் பதில் சொல்வதில்லை. தண்ணீரும் கிடைப்பதில்லை'' என பெண்கள் கோபத்துடன் அமைச்சரைக் கேள்வி கேட்டனர்.
உடனே அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகளிடம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்குமாறு உத்தரவிட்டார். அதன்பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோவையின் பல பகுதிகளில் பிப்ரவரி இரண்டாம் வாரம் முதற்கொண்டே குடிநீரும் உப்புநீரும் மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் வந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications