கோவை: 3 கடைகளில் கொள்ளை… போலீசை கண்டித்து சாலைமறியல்
கோவை: கோவையில் துணிக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தீவைத்துச் சென்ற திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையையடுத்த மாதம்பட்டியில், செல்போன் கடை, சைக்கிள் கடை மற்றும் துணிக்கடைகளில் இன்று அதிகாலையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கடைகளுக்கு கொள்ளையர்கள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், காவல் துறையினரை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலை மறியல் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''மாதம்பட்டி பகுதி ஆலந்துறை காவல் நிலையத்திற்கும் பேரூர் செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கும் இடையே வருகிறது. எல்லைப் பிரச்னையில் எந்த போலீசாரும் இரவு ரோந்து வருவதில்லை. மேலும், நாங்கள் புகார் தெரிவிக்க சென்றால் எங்களுடைய எல்லையில்லை என்று இரண்டு காவல் நிலைய அதிகாரிகளும் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. இந்த பிரச்னையை உடனடியாக போக்கவும், இன்று நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்"
இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் தகவல் அறிந்த பேரூர் செட்டிபாளையம் போலீசார், அங்கு விரைந்து வந்து பொதுமக்க்ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications