ரேக்ளா பந்தயம் நடத்த வந்த அமைச்சர் வேலுமணியை விரட்டியடித்த இளைஞர்கள்.. கோவையில் பரபரப்பு
கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.
ஆனால் அங்கு, விரைந்து வந்த சுமார் ஆயிரம் இளைஞர்கள் ரேக்ளா பந்தய பாதையை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் ஒலிபெருக்கியில் பேசி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர் விஷயத்தை பேச வரும் முன்பே குறுக்கிட்ட இளைஞர்கள், கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

"வெளியே போ.. வெளியே போ.." என அவர்கள் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். இதனால் போலீசார் கையை பிசைந்தனர். அங்கு அமைச்சர் வேலுமணியின் காரையும் இளைஞர்கள் முற்றுகையிட்டனர். அவரால் நகர முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே, வேலுமணி கார் கொடிசியாவிலிருந்து பின்வாசல் வழியாக வெளியேறியது. அதாவது இளைஞர்கள் வேலுமணியை விரட்டியடித்தனர்.
இதனால் அலங்காநல்லூர் போலவே கோவையிலும் அரசுக்கு அவமானமே பரிசாக கிடைத்தது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications