அவசரகதியில் கட்டப்பட்ட 11 மாடி கட்டிடம்: வடிவமைப்பில் குளறுபடி- 6 பேரையும் காவலில் எடுக்க முடிவு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் வடிவமைக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள கட்டிடக் கலைநிபுணர் விஜய் பர்கோத்ரா கட்டிடக் கலைநிபுணர்கள் கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
பதிவு செய்யப்படாத நிபுணர் அளித்த வடிவமைப்பைக் கொண்டு 11 மாடிக் கட்டிடம் கட்டியது எப்படி என்றும் கட்டிடக் கலை நிபுணர்கள் கவுன்சில் கேள்வி எழுப்பியுள்ளது.

சரிந்த கட்டிடம்
கடந்த சனிக்கிழமையன்று போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். 42 பேர் சடலமாகவும், 27 பேர் உயிரோடும் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
விசாரணை அதிகாரியான பூந்தமல்லி உதவி கமிஷனர் சுப்பிரமணி, கட்டிட விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கட்டிடம் இடிந்தது தொடர்பாக முழுமையான அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இது வரை நடைபெற்றுள்ள விசாரணை விவரங்கள் காவல்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுமான நிறுவனத்தின் பணி
இதற்கான பொறுப்பு முழுவதுமே கட்டுமான நிறுவனத்திடமும், என்ஜினீயர்களிடமே இருக்கிறது. இது போன்ற பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் போது முக்கிய பங்காற்றுவது ‘‘ஸ்ட்ரெச்சுரல் என்ஜினீயர்'' தான். எந்தெந்த பகுதியில் தூண்கள் அமைத்தால் கட்டிடம் வலுவானதாக இருக்கும் என்பது அவருக்குதான் தெரியும். இதனை சரியாக கடைபிடிக்காவிட்டால் ஆபத்து ஏற்படுவது நிச்சயம்.

மவுலிவாக்கம் கட்டிடம்
மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தில் இத்தகைய வடிவமைப்பில் பெரிய அளவில் குளறுபடி நடந்திருக்கலாம் என்றே கருதுகிறோம். இதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதன் பின்னணி பற்றியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான 6 பேர்
இதற்காக கைதான கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன் உள்ளிட்ட 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறையான மண் பரிசோதனை
11 மாடி கட்டிடத்தை கட்டியபோது சாயில் டெஸ்ட் என்று அமைக்கப்படும் மண் பரிசோதனை, காங்கிரீட் பரிசோதனை ஆகியவையும், முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

மணலுடன் கலப்படம்
ஒரு சில கட்டுமான நிறுவனத்தினர் மணலுடன் கிரசர் பவுடரையும் கலந்து விடுவார்கள். அப்படி முறைகேடு எதுவும் 11 மாடி கட்டிடத்தில் நடைபெற்றதா? என்றும் சில பொறியாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பரவும் வாட்ஸ் அப்
இதனிடையே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு சி.எம்.டி.ஏ. விதிமுறை மீறி அனுமதி அளித்துள்ளதே காரணம் என்று செல்போனில் ‘வாட்ஸ் அப்' மூலம் தகவல்கள் பரவி வருகின்றன.

தாமதமாக அனுமதி
‘பிரேம் சிருஷ்டி' கட்டிட நிறுவனம் சி.எம்.டி.ஏ.விடம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு 15.2.12 தேதியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்ததாகவும் 3.6.13-ல் 16 மாதம் கழித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் தாமதமாக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

போரூர் ஏரியின் சர்வே எண்
மொத்தம் 2056 சதுர மீட்டரில் 86 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ள சர்வே எண்ணும், போரூர் ஏரியின் சர்வே எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி மண் பரிசோதனை
கட்டிட வடிவமைப்பு என்ஜினீயர் சம்பவ இடத்தை மேற்பார்வையிட்டு அதன் பிறகுதான் அனுமதி தர வேண்டுமாம். ஆனால் விதிகளில் மாற்றம் செய்தும் போலியான மண் பரிசோதனை சான்று வழங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பில்லர் மாதிரி
ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் பெரிய அடுக்குமாடிகள் கட்டுவதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள். 3 அடி அகலம் கொண்ட பில்லர் போடுவதற்கு பதிலாக 1½ அடி பில்லர் போட்டு விதி மீறல் நடந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரம் அவசரமாக
மேலும் ஒவ்வொரு தளமும் போடுவதற்கு குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதை பின்பற்றப்படாமல் ஆறு மாதத்தில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்துள்ளன.

இடைஞ்சலான பகுதியில்
60 அடி அகலம் கொண்ட சாலையில்தான் 6 மாடிகள் கட்ட முடியும். ஆனால் 30 அடி கொண்ட சாலையில் 11 மாடி கட்ட எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது போன்ற பரபரப்பு தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நடந்தது என்ன?
ஆனால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நடந்தது என்ன என்று உண்மையை கண்டறிந்தால் மட்டுமே இனி நடுத்தர வர்க்கத்தினர் அடுக்குமாடி குடியிருப்பில் நம்பி வீடு வாங்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications