கலெக்டர் பிஏ கொலையில் திடுக் தகவல்.. கள்ளக் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி!

புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக் காதலனுடன் சேர்ந்து கலெக்டர் பிஏ-வை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி!- வீடியோ

    புதுக்கோட்டை: கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது கள்ளக்காதலியான சக ஊழியரான டைபிஸ்ட் சவுந்தர்யாவே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூபதி கண்ணன். 45 வயதான இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பூபதி கண்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திடுக் தகவல்கள்

    திடுக் தகவல்கள்

    பூபதி கண்ணன் கொலை வழக்கில் சக பெண் ஊழியரான டைபிஸ்ட் சவுந்தர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திருமணத்திற்கு முன் காதல்

    திருமணத்திற்கு முன் காதல்

    சவுந்தர்யாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் ஆகும். இவரது கணவர் சுரேஷ். இவர் கரூர் மாவட்டம் குளித்தலையில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் குளித்தலையில் வசித்து வந்தனர். முன்னதாக சவுந்தர்யா சொந்த ஊரான பெருவளநல்லூரில் திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார்.

    கணவர் தற்கொலை

    கணவர் தற்கொலை

    திருமணத்திற்கு பின்பும் அவருடன் காதலை தொடர்ந்துள்ளார். இந்த விஷயம் சுரேசுக்கு தெரியவரவே அவர் சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்திருக்கிறார்.

    மீண்டும் தொடர்ந்த கள்ளக்காதல்

    மீண்டும் தொடர்ந்த கள்ளக்காதல்

    அதன்பின் கருணை அடிப்படையில் சவுந்தர்யாவிற்கு வேளாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் முன்னாள் காதலன் நாவல்பட்டு அண்ணாநகர் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.

    பூபதி கண்ணனுடன் பழக்கம்

    பூபதி கண்ணனுடன் பழக்கம்

    சவுந்தர்யாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் கல்லூரியில் படிக்கிறார். மகள் 7-ம் வகுப்பு படிக்கிறாள். இந்தநிலையில் சவுந்தர்யாவுக்கு அலுவலகத்தில் பணியில் இருந்த பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது. பூபதி கண்ணன் திருச்சி ராஜா காலனியில் இருந்து தினமும் புதுக்கோட்டைக்கு காரில் சென்று வந்தார். அப்போது, சவுந்தர்யாவையும் உடன் அழைத்து சென்றார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    பூபதி கண்ணன் ஆத்திரம்

    பூபதி கண்ணன் ஆத்திரம்

    இந்த விஷயம் சவுந்தர்யாவின் முன்னாள் காதலனுக்கு தெரியவந்தது. அவர் பூபதி கண்ணனுடனான பழக்கத்தை கைவிடுமாறு சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். இதற்கிடையில் சவுந்தர்யாவுக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது பூபதி கண்ணனுக்கு தெரியவந்தது. இதனால் சவுந்தர்யாவை அவர் கண்டித்தார். ஒரே நேரத்தில் 2 பேரிடமும் சவுந்தர்யா கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் பூபதி கண்ணன் ஆத்திரமடைந்தார்.

    முதல் கள்ளக்காதலனுடன் திட்டம்

    முதல் கள்ளக்காதலனுடன் திட்டம்

    பூபதி கண்ணனின் கண்டிப்பு நாளுக்கு நாள் அதிகமானதால் அவர் மீது கோபத்தில் இருந்தார் சவுந்தர்யா. பூபதி கண்ணனை இனிமேலும் விட்டு வைப்பது சரியல்ல என்று எண்ணிய சவுந்தர்யா இதனை முதல் கள்ளக்காதலனிடம் கூறி அழுது புலம்பியிருக்கிறார். பூபதி கண்ணனை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சவுந்தர்யா திட்டமிட்டார்.

    கள்ளக்காதலனுக்கு வலை

    கள்ளக்காதலனுக்கு வலை

    அதன்படி சம்பவத்தன்று பூபதி கண்ணனுடன் காரில் வந்த போது, மாத்தூர் அருகே அரைவட்ட சுற்றுச்சாலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் வைத்து பூபதி கண்ணனை கொலை செய்துள்ளனர். இந்த கள்ளக்காதலால் கலெக்டரின் பிஏ கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பெருவளநல்லூரை சேர்ந்த கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கொலை செய்தது எப்படி?

    கொலை செய்தது எப்படி?

    மேலும் பூபதி கண்ணனை கொலை செய்தது எப்படி எத்தனை பேர் சேர்ந்து அவரை கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சவுந்தர்யாவின் கள்ளக்காதலன் சிக்கும் பட்சத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+