சென்னையில் தொடர்ந்து எரியும் வாகனங்கள்: நடு ரோட்டில் கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்தது
சென்னை: தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலையில் கிண்டி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் மந்தைவெளியில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

கிண்டி வழியாக சர்தார்பேட்டை சாலையில் வரும்போது திடீரென பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக ஓட்டுநர் வினோத் என்பவர் பேருந்தின் வேகத்தை குறைத்து பேருந்தை ஓரமாக நிறுத்தினர். அந்த பேருந்தில் மொத்தமுள்ள 38 மாணவ, மாணவிகளை உடனடியாக வெளியேற்றினார். மாணவ, மாணவிகள் அவசரஅவசரமாக வெளியேறிய அடுத்த நிமிடமே பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலாக பேருந்து எரிந்து நாசமானது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியமான செயலால் மாணவர்கள் உயிர் தப்பினர்.
தனியார் பல்கலைக்கழக கல்லூரி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடுரோட்டில் பேருந்து கொளுந்து விட்டு எரிந்த காரணத்தால் கிண்டி அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கொளுத்தும் வெயில் காரணமாக நடுசாலையில் ஓடும் கார்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன. இப்போது காலை நேரத்திலேயே பேருந்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications