இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. சென்னை அருகே கல்லூரி மாணவி தற்கொலை!
செங்கல்பட்டு: தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்கிறார்கள் இவருடைய மகள் சுவேதா (வயது 20). இவர், செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படிதது வந்தார்.
இவர் லைக்கிற்காக சமூக வலைத்தளங்களில் விதவிதமாக தனது புகைப்படங்களை பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். வழக்கம்போல் செல்போன் மூலம் தனது புகைப்படத்தை 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

நவீன தொழில் நுட்பம்
அந்த படத்தை மர்ம நபர்கள் சிலர் நவீன தொழில்நுட்பம் மூலம் 'மார்பிங்' செய்து மாணவி சுவேதாவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை பார்த்த மாணவி சுவேதான அதிர்ச்சி அடைந்தார்.

மனஉளைச்சல்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இதுபற்றி தனது வீட்டுக்கு தெரியவந்து விடுமோ? என்ற அச்சத்தில் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வழக்கு பதிவு
இந்நிலையில் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் மாணவியை தேடி வந்தார்கள் அப்போதுதான் விவசாய கிணற்றில் தங்கள் மகள் சுவேதா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாணவி தற்கொலைக்கு இன்ஸடாகிராமில் ஆபாச புகைப்படமே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,

போலீசார் விசாரணை
இதுபற்றி மர்ம நபர்கள் மீது செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்., மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு அவரது தற்கொலைக்கு காரணமான மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேஸ்புக்கில் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெண்களை குறிவைத்து ஆபாச வக்கிர தாக்குதல்கள் அடிக்கடி நடக்கிறது. அப்பாவி பெண்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. இப்படிப்பட்ட கொடூரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications