சென்னை: ஓடும் காரில் செல்ஃபி எடுத்த போது விபத்து - ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
சென்னை: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஓடும் காரில் இருந்து தலையை வெளியே நீட்டி செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே காரில் பயணித்த நண்பர்கள் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சுண்டைக்காய் பாளையம், சின்ன பீளமேடு பகுதியை சேர்ந்த சகாபுதீன் என்பவரின் மகன் பாசில்,20. இவர், வண்டலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால், தன்னுடன் படிக்கும் சக நண்பர்களான சபீர் அகமது, பாசில், சமீர் ஆகிய மூவருடன் மாமல்லபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். காரை பாசில் ஓட்டியுள்ளார். பாசில் முன் சீட்டில் அமர்ந்துள்ளார். இந்நிலையில்,கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓடும் காரில் இருந்தபடியே செல்ஃபி எடுக்க பாசில் ஆசைப்பட்டார்.
கார் ஓட்டிக்கொண்டிருந்த பாசில், நண்பர்களிடம் திரும்பி, எல்லோரும் தலையை வெளியே நீட்டுங்கள், நாம் செல்ஃபி எடுக்கலாம் என்றார். நண்பர்களும் செல்ஃபி எடுக்கும் ஆசையில் வேகமாக சென்ற காரின் உள்ளே இருந்து தலையை வெளியே நீட்டியுள்ளனர். செல்ஃபி எடுக்கும் மோகத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த பாசிலும் தலையை வெளியே நீட்டினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மின்னல் வேகத்தில் பறந்தது. அதற்குள் கார் சென்ற வேகத்தில் சாலையில் பலமுறை பல்டி அடித்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் சிக்கிக் கிடந்தவர்களை வெளியே இழுத்தனர். பின்னர் 4 பேரையும் கேளம்பாக்கம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாசில் நேற்று உயிரிழந்தார். நண்பர்கள் 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபீர் அகமது புகாரின் பேரில் மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைக்கு செல்ஃபி மோகம் அனைவரையும் பிடித்துள்ளது. செல்ஃபியினால் பலர் உயிரை இழந்துள்ளனர். ஓடும் காரில் தலையை வெளியே நீட்டி செல்ஃபி எடுத்தபோது மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications