புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘விக்’... அழகிய கூந்தலை 'தானம்' செய்த சென்னை மாணவிகள்
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ‘விக்' எனப்படும் செயற்கை முடி வாங்க இயலாதவர்களுக்கு உதவிடும் வகையில் தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் சென்னை கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர்.
ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி கூந்தல் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். காரணம் முக வசீகரத்தை கூட்டிக் காட்டுவதில் முடியின் பங்கு அதிகம் என்பதால் தான்.
சமீபத்தில், வடமாநிலத்தில் தலையில் முடி இல்லை என மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால், விதியின் சதியால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவோர் தலையில் முடியை இழக்கின்றனர்.
அத்தகையோருக்கு ‘விக்' செய்து தருவதற்காக தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் சென்னையில் உள்ள கல்லூரி மாணவிகள்.

சர்வதேச புற்றுநோய் தினம்...
கடந்த செவ்வாயன்று சர்வதேச புற்றுநோய் தினம் அனுசரிக்கப் பட்டது. எனவே, புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள வுமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிகள் தங்கள் கூந்தலை தானமாக அளித்துள்ளனர்.

அதிக விலை விக்குகள்....
இது குறித்து 13 இன்ச் கூந்தலைத் தானமாக அளித்த ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி ரென்னி கூறுகையில், ‘பொதுவாக விக்குகள் ரூ 10 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரம் வரை கூட விற்கப் படுகின்றன.

மற்றப் பெண்களும்....
வறுமை நிலையில் வாழும் கூந்தலை இழந்த புற்றுந்நோய் பாதிப்படைந்தவர்கள் தங்கள் மருத்துவச் செலவுக்கே அல்லாடும் போது, இது போன்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள். அதனால் தான் நான் எனது கூந்தலைத் தானமாக அளித்துள்ளேன். மற்றப் பெண்களும் இது போன்று தானமாக அளிக்க முன்வர வேண்டும் என நான் விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு....
தலையில் முடி இல்லாததால் குறிப்பாக குழந்தைகள் தன்னம்பிக்கை இழந்து விடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய விழிப்புணார்வு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் இவர்கள்.

மன அழுத்தம்....
ஏற்கனவே நோய்த் தாக்குதலாலும், அதற்கு அளிக்கப் படுகின்ற சிகிச்சைகளாலும் உடல் வலியை அனுபவிக்கும் குழந்தைகள், முடியையும் இழப்பதால் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர் வி. சுரேந்தர்.

பாய் கட் ஸ்டைல்....
இந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவி தனது முழுக் கூந்தலையும் அளித்து மொட்டை போட்டுக் கொண்டார். மேலும், சில மாணவிகள் தங்களது நீளக் கூந்தலை தானம் அளித்து விட்டு ஆண்கள் போன்ற ஹேர்ஸ்டைலுக்கு மாறினார்கள்.

நூறுக்கும் மேற்பட்டோர்....
கிட்டத்தட்ட ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கூந்தல் தானம் செய்தனர். மேலும், 200 பேர் தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளனராம்.

நூறு விக்குகள்....
தனியார் முடி திருத்தும் நிலையம் இலவசமாக இந்த கூந்தல் தான நிகழ்ச்சிக்கு உதவியது. இதன் மூலம் சேகரிக்கப் பட்ட முடிகள் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் வசம் ஒப்படைக்கப் பட்டது. இவற்றைக் கொண்டு சுமார் நூறு விக்குகள் தயாரிக்கலாம் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications