சென்னையில் முதல் நாளே கல்லூரிக்கு கத்தியுடன் வந்த 50 மாணவர்கள்.. சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்
சென்னையில் முதல் நாளே கல்லூரிக்கு கத்தியுடன் வந்த 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: முதல் நாளே கல்லூரிக்கு கத்தியுடன் வந்த 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களின் ரகளையில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து தினம் கொண்டாடுவது, ரூட் தல யார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சகமாணவர்களுடன் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் கத்திய, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்களிடையே மோதல்
குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே தான் மோதல் சம்பவம் அதிகமாக உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலான கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி வகுப்புகள் இன்று தொடங்கின.

பாதுகாப்பு பணியில் போலீசார்
பஸ், ரயில்களில் புறநகர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது முதல் நாள் பயணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதனை அறிந்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

பேருந்தில் ரகளை
இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் ரகளைகளில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பயணம் செய்தனர்.

50 மாணவர்கள் கைது
திடீரென அவர்களை சுற்றி வளைத்த போலீஸார், மாணவர்கள் 50 பேரை பிடித்தனர். இதில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் 33 பேர், மாநில கல்லூரி மாணவர்கள் 13 பேர் பிடிபட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரும் சிக்கியுள்ளனர்.

பயத்துடன் பயணித்த பயணிகள்
பிடிபட்ட 50 மாணவர்களிடம் கத்திகள், கோடாரிகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீஸார் எச்சரிக்கையும் மீறி கல்லூரி தொடங்கிய முதல் நாளில் பேருந்தில் மாணவர்கள் ரகளை ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களிடம் விசாரணை
பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்துகளில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications