”அடிச்சுக் கேட்டாக் கூட வைகோ பேரையே சொல்லுங்க”- போண்டா மணி பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: இன்றைய தேர்தல் நிலவரப்படி, நடிகர்களுக்கு இணையாக காமெடி நடிகர்களும் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மதிமுகவில் புதியதாக பிரச்சார களாத்தில் குதித்துள்ளனர் காமெடி நடிகர்களான போண்டாமணி மற்றும் சாப்ளின் பாலு ஆகியோர்.

அவர்கள் எல்லாம் படங்களில் பேசுவது போலவே வசனங்களைப் பயன்படுத்தி பேசி மக்களை சிரிக்க வைத்து வாக்கு சேகரிக்கின்றனர்.

விருதுநகரில் பிரச்சாரம்:

விருதுநகரில் பிரச்சாரம்:

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஆதரித்து அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் பிரசாரம் செய்தனர்.

வைகோவால் மோடி பிரதமராவார்:

வைகோவால் மோடி பிரதமராவார்:

திறந்த ஜீப்பில் வீதி வீதியாக வலம் வந்த போண்டாமணி பேசுகையில், "தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வைகோவை வெற்றி பெறசெய்யுங்கள். இந்த தொகுதியில் வைகோ வெற்றி பெற்றால் மோடி பிரதமராவார்.

போலீஸ் பார்க்கறாக:

போலீஸ் பார்க்கறாக:

அவரிடம் தமிழர்களுக்காக வைகோவால் வாதாட முடியும். நான் பேசுவதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

எப்படி கேட்டாலும் சொல்லீறாதீக:

எப்படி கேட்டாலும் சொல்லீறாதீக:

அவர்கள் உங்களிடம் நான் என்ன பேசினேன் என கேட்பார்கள். சொல்லிராதீக... அடித்து கேட்டாலும் சொல்லிராதீக...! வைகோவுக்கு ஓட்டு போடுவேன் என்று மட்டும் சொல்லுங்க" என்றார்.

ஏன் இப்படிப் பேசுகிறார் போண்டா:

ஏன் இப்படிப் பேசுகிறார் போண்டா:

வடிவேலு படத்தில் போண்டா மணி பேசும் வசனம்தான் அடிச்சுக் கூட கேப்பாக அப்பவும் சொல்லீராதிக. அதைத்தான் இப்போது பிரசாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளார் போண்டா மணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+