குற்றாலம்: தீயணைப்பு கமாண்டோக்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை
குற்றாலம்: குற்றாலத்தில் தீயணைப்பு மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தீயணைப்பு துறையினருக்கு பல நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுத்து கமாண்டோ வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் போன்றோர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்கு வகிப்பர்.
குற்றாலம் மலைப்பகுதியாக இருப்பதாலும், அடிக்கடி வெள்ளம் ஏற்படும் இடமாக இருப்பதாலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, மலைப்பாதைகளில் பயணம் செய்யும் போது விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்பது எப்படி என பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கும் விதமாக இன்று குற்றாலத்தில் கமாண்டோ வீரர்களின் பேரிடர் மீட்பு நிகழ்ச்சி நடத்துக்கின்றனர்.
இதற்காக நேற்று குற்றாலத்தில் பிரதான அருவி மலைப்பகுதியில் கயிறு மூலம் இறங்கி ஒத்திகையில் ஈடுபட்டனர். இன்றும் இப்பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications