கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் தொடக்கம்: விஞ்ஞானி தகவல்
கன்னியாகுமரி: கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று 11 நாடுகளைச் சேர்ந்த அணு விஞ்ஞானிகள் பாராட்டினர். இதனையடுத்து வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் போது திட்டமிடப்பட்டுள்ள 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
அழுத்த மின்னீர் அணு உலை பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு குமரியில்,3 நாட்கள் நடந்தது. இந்த கருத்தரங்கில் சீனா, ஈரான், ரஷ்யா, உக்ரைன் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 அணுசக்தி விஞ்ஞானிகள் பங்கேற்று அணுஉலை குறித்து விவாதித்தனர். இந்த கருத்தரங்கு நேற்று நிறைவுபெற்றது.

கருத்தரங்கு குறித்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பஜாஜ் செய்தியாளாகளிடம் பேசியதாவது:
கருத்தரங்கில் புகுஷிமா அணு உலை விபத்திற்கு பின்னால் அணு உலையின் பாதுகாப்பு, தரமேம்பாடுகள், நவீன தொழில்நுட்பம், போன்றவற்றை ஆய்வு செய்யும் நோக்கத்தில் இந்தியாவில் முதன் முறையாக கன்னியாகுமரியில் இந்த கூட்டம் நடந்தது.
உலகில் இயங்குகிற அணு உலை வரிசையில் கூடங்குளம் அணு உலை அதிநவீன உபகரணங்களைக் கொண்டது என்பதால் இந்த குழுவினர் அதை முழுமையாக ஆய்வு செய்து மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று திருப்தியடைந்து பாராட்டினர்.
கூடங்குளத்தில் தற்போது சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் போது திட்டமிடப்பட்டுள்ள 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும்.
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் தற்போது இல்லை. 3 மற்றும் 4வது அணுஉலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications