காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

இலங்கையில் இம்மாதம் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல்.
இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தும் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மத்திய அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள காங்கிரஸ் உயர்நிலைக் குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்படி பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக நாளை சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் அனேகமாக காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை ஜி.கே.வாசன் தொடங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications