ஓடும் பஸ்சில் கண்டக்டர் வெட்டிக் கொலை
வீராணம்: ஓடும் பஸ்ஸிலேயே ஆயுதங்களால் தாக்கப்பட்டு கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வீராணம் அருகே முன்விரோதம் காரணமாக அரசு பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் அருகே வலசையூர் அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் , அரசு பஸ் கண்டக்டராக பணி புரிந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வலசையூரில் இருந்து சேலம் வந்த டவுன் பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது சின்னனூர் பஸ் ஸ்டாப் அருகே பஸ் வந்த போது பஸ்சை நிறுத்திய கும்பல் கண்டக்டர் சண்முகத்தை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியது. கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தனிப்படை போலீசார் கூறியதாவது, "கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் மகன் சுரேன் பாபு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். இப்பிரச்னையில் அப்பெண்ணின் அண்ணன் 2009 இல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இதே போல் தன் அண்ணன் மகனுக்கும் பருத்திக்காட்டை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். இது போன்ற முன்விரோத காரணங்களால் சண்முகம் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications