உள்ளாட்சி தேர்தல்... மு.க. ஸ்டாலின் வியூகத்தால் காங். தலைவர்கள் அதிர்ச்சி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வகுத்து வரும் வியூகத்தால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 28-ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

காங். கூட்டணிக்கு எதிர்ப்பு
அப்போது மாவட்ட செயலாளர்களில் பலரும் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என கூறியுள்ளார். சிலர் மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தனித்தனி ஆலோசனை
ஆனால் ஸ்டாலினோ இதுபற்றி எந்த கருத்தையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூறவில்லையாம். அதே நேரத்தில் இக்கூட்டத்துக்கு பின்னர் ஒவ்வொரு மாவட்ட செயலரையும் தனித்தனியே அழைத்து பேசியுள்ளார் ஸ்டாலின்.

ஓடவிடுங்கள்...
அப்போது, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணியை மாவட்ட அளவிலேயே பார்த்து கொள்ளுங்கள். கடந்த காலங்களைப் போல காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் என எந்த கணக்கும் இல்லை. அவர்களாகவே கூட்டணியைவிட்டு வெளியேறி ஓடும் நிலைக்கு இடங்களை ஒதுக்குங்கள். சட்டசபை, லோக்சபா தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிடுங்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் காங்.
அதாவது சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 5 அல்லது 10 மட்டும் காங்கிரஸுக்கு தருவது; அதை ஏற்க மறுத்தால் நீங்க தனித்தே போட்டியிடுங்க என விரட்டிவிடுவது இதுதான் ஸ்டாலினின் திட்டமாம். தொடர்ந்து திமுகவுடன் முட்டிக் கொண்டே இருக்கும் தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருக்கு இப்படித்தான் பதில்தர முடியும் என்கிறதாம் ஸ்டாலின் தரப்பு. இந்த வியூகத்தால் உள்ளாட்சி தேர்தலில் என்ன நடக்குமோ என பீதியில் இருக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications