வளையல் அனுப்பி வைக்கிறோம், மோடியை போட்டுக்கச் சொல்லுங்க.. காங். அதிரடி
சென்னை: மோடி பிரதமராக வந்த பிறகு எல்லையில் 135 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சேலை கட்டுமாறு கூறினார் ஸ்மிருதி இராணி. இப்போது பிரதமர் மோடியை வளையல் போடச் சொல்கிறோம் என்று கூறியுள்ளார் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
முன்பு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எல்லையில் ஒரு ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சமத்தில், இப்போதைய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, பிரதமர் மன்மோகன்சிங்கை வளையல் அணிய சொல்லுங்கள் என்றார்.

சுஷ்மா சுவராஜோ, நாங்கள் ஆட்சியில் இருந்து இருந்தால் 1 வீரரின் தலைக்குப்பதிலாக 10 பேரின் தலையை எடுத்திருப்போம் என்றார். இன்று நிலைமை என்ன?
ராணுவ வீரர்களின் தலையை பறி கொடுத்து நாட்டை தலைகுனிய வைத்துள்ளார் மோடி. பா.ஜ.க ஆட்சியில் 135 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. எல்லை பாதுகாப்பு படை வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்கிறார்கள்.
எனவே நீங்கள் சொன்னதையே நாங்கள் திருப்பி சொல்கிறோம். பிரதமரை வளையல் அணிய சொல்லுங்கள். வளையல் தட்டுப்பாடாக இருந்தால், சொல்லுங்கள், நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று தான் ஸ்மிதிரிஇரானிக்கு அனுப்ப இருக்கிறோம். அவர் பிரதமருக்கு அனுப்பி வைக்கட்டும் என்று சாடியுள்ளார் ஹசீனா சையத்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications