காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அக்.15ல் காங்கிரஸ் உண்ணாவிரதம்
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தஞ்சாவூரில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் வரும் 15ம் தேதி திருநாவுக்கரசர் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளார். திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மத்திய அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த அறப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.ஆர்.ராமசாமி, ப,சிதம்பரம், ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறினார். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு துரோகம் செய்வதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications