சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு!
சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதாரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அழைத்து செல்ல முயற்சி
இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதாரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

என்னை தொடாதீர்கள்
அவர்களைப் பார்த்து விஜயதாரணி, ‘‘என்னை தொடாதீர்கள்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

விஜயதாரணி பேட்டி
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன்.

அனுமதி மறுப்பு
நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.

சேலையை பிடித்து இழுத்து
சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை, நெஞ்சை அமுக்கியும் வெளியேற்றினார்கள்.

சபாநாயகர் அநாரீகம்
சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications