மேலிட முடிவுக்கு கட்டுப்பட்டு.. எடப்பாடிக்கு எதிர்ப்பு… கடுப்போடு முடிவெடுத்த திருநாவுக்கரசர்
காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்து வாக்களிக்க விரும்பிய நிலைக்கு மாறாக, இன்று வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கொறடா விஜயதாரணி கூட்டினார். 8 எம்எல்ஏக்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் இதற்கு உடன்படவில்லை. இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. அதில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் அறிவித்தார்.
இதுகுறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம், எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிற தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை விளக்கி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் சொல்லி இருக்கிறோம். அதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
இவ்வளவு நேரம் கழித்த தாமதமாக ஏன் அறிவித்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாமல் திணறிய திருநாவுக்கரசர், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அரை மணி நேரம் இருக்கிறது என்று அதற்குள் அறிவித்துவிட்டோம் என்று சமாளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications