விருப்ப மனுக்கள் அளித்த காங்கிரஸ் கட்சியினரிடம் சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல்
சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று நேர்காணல் நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். இந்நிலையில் விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் வைத்து இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட கட்சி உறுப்பினர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். நேர்காணல் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டி. யசோதாவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கூட்டணி கட்சியான திமுகவும் விருப்ப மனுக்கள் அளித்துள்ள கட்சியினரிடம் நேர்காணல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
