நீங்க டிஜிட்டல் இந்தியான்னா.. நாங்க "பாதர் ஆப் தி டிஜிட்டல் இந்தியா"வாக்கும்... கலகலக்கும் போட்டி
சென்னை: நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது புரபைல் படத்தை மாற்றினாலும் மாற்றினார், சகட்டு மேனிக்குப் பலரும் படத்தை மாற்ற ஆரம்பித்துள்ளனர். மோடியும் மாற்றியுள்ளார். இந்த நிலையில் அதற்குப் போட்டியாக பாதர் ஆப் தி டிஜிட்டல் இந்தியா என்ற இன்னொரு புகைப்பட மாற்றம் வைரல் ஆக பரவி வருகிறது.

இந்த போட்டி புகைப்பட மாற்றத்தை ஆரம்பித்து வைத்திருப்பது காங்கிரஸார். உண்மையில் டிஜிட்டல் இந்தியாவுக்கான விதையைப் போட்டவர் மறைந்த ராஜீவ் காந்திதான் என்ற வாதத்தையும் இவர்கள் வைத்து தங்களது புரபைல் படத்தை மாற்றி வருகின்றனர்.

டிஜிட்டல் இந்தியா ஆதரவு புரபைல் பட மாற்றம் போலவே இதுவும் இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி புகைப்படத்தை வைத்து, அதன் குறுக்கே பாதர் ஆப் தி டிஜிட்டல் இந்தியா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இப்போது இந்தப் புகைப்பட மாற்றமும் பேஸ்புக்கி்ல் பிரபலமாகி வருகிறது. பலரும் இதைப் போட ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸார் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டது என்றால் அது ராஜீவ் காந்தி காலத்தில்தான். அப்போதுதான் கம்ப்யூட்டர் இந்தியாவில் நுழைந்து பிரபலமானது. அதை மனதில் வைத்தே காங்கிரஸார் இப்படிப்பட்ட நூதனப் போட்டி பிரசாரத்தில் இறங்கியுள்ளனர் போலும்.












Click it and Unblock the Notifications