”காங்கிரஸை மக்கள் இவ்வளவு எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” – ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை: மக்களின் எதிர்ப்பலையை காங்கிரஸ் கட்சி இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜி.கே .வாசன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணங்கள் கண்டறிய வேண்டும். காரணங்கள் கண்டறிந்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படும். கட்சியை பலப்படுத்தும் முடிவுகளை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும். மக்களின் எதிர்ப்பலையை இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும்,பாஜக அவசர சட்டம் மூலம் முதன்மை செயலாளரை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், "அவசர சட்டதின் மூலம் செயலாளரை நியமிப்பது நல்ல மரபல்ல. லோக்பால் போன்ற மசோதவை கூட அவசர சட்டத்தின் மூலம் உருவாக்கபடுவதை பாஜக எதிர்த்தது.தற்போது தனி ஒருவர நியமனத்துக்கு அவசர சட்டம் இயற்றியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மறு ஆய்வு செய்வது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் .பிரச்சினைய தூண்டும் பேச்சுக்களை ஆட்சியாளர்கள் தவிர்க்க வேண்டும்.
தேசிய அளவிலான பிரச்சினைகளே தோல்விக்கு காரணமாயின. கட்சியின் உட்கட்சி பிரச்சினைகளை வெளியில் பேசவேண்டாம்" என்றும் அவர் கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications