த.மா.கா.வையும் வளைக்கும் திமுக 'மூவ்'... கடுப்பில் ராகுல்... கூட்டணி கலகலக்குமா? களைகட்டுமா?
சென்னை: த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்கும் திமுகவின் வியூகத்தை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங். தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வாசனின் த.மா.கா., அதிமுக, ம.ந.கூ அல்லது தேமுதிகவுடன்தான் போகும் என கருதியிருந்தனர்.
இதனடிப்படையிலேயே திமுக கூட்டணியில் 63 தொகுதிகளைக் கேட்டிருந்தாலும் எப்படியும் 50 தொகுதிகளை வாங்கிவிடலாம் என நம்பிக்கையோடு இருந்தது காங். ஆனால் கடந்த வாரம் சென்னை வந்த குலாம்நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்த போதுதான் த.மா.கா.வுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது காங்கிரசாருக்கு தெரியவந்தது.

50 தொகுதி ஆசைக்கு வேட்டு
த.மா.கா.வும் கூட்டணி வரக் கூடும்; அப்போது அந்த கட்சிக்கு 20 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 50 தொகுதிகள் ஆசைக்கு திமுக தரப்பில் வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே குலாம்நபி ஆசாத் சென்னை புறப்படும்போதே, வாசன் இருக்கிற கூட்டணியே வேண்டாம்; தனித்தே போட்டியிடலாம் என ராகுல் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

தேக்கநிலை
இந்நிலையில் திமுக இப்படி ஒரு குண்டை வீச கருணாநிதி- குலாம்நபி ஆசாத் சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. குலாம்நபி ஆசாத் தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திடுவார் என ரொம்பவே எதிர்பார்த்த திமுக சற்றே ஏமாற்றமடைந்தது. இதனைத் தொடர்ந்து திமுக- காங். கூட்டணி பேச்சுவார்த்தையில் தேக்க நிலை உருவானது.

சமாதான முயற்சி
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்துடன் பேசிவருகின்றனர். ஆகக் கூடுமானவரை திமுக கூட்டணியில் நீடித்து 40 தொகுதிகளாவது பெற முயற்சிப்போம்; வாசன் இடம்பெறுவதாலேயே நாம் தனித்து போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக ப்ளான் இது
திமுகவைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் மற்றும் 2 காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகளை உறுதி செய்து கொள்வதன் மூலம் வராமல் போன இதர கட்சிகளின் வாக்குகளை சமன் செய்துவிடலாம் என்பது ப்ளான். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய முஸ்லிம் கட்சிகள் திமுகவுக்கு வந்துவிட்டன.
தற்போது காங்கிரஸை சமாதானப்படுத்தி த.மா.கா.வையும் கூட்டணியில் இணைப்பதில் திமுக மும்முரமாக இறங்கியுள்ளது. டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்களின் முயற்சி பலித்தால் திமுக கூட்டணி களைகட்டும்... இல்லையெனில் கலகலக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதே நிதர்சனம்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு?












Click it and Unblock the Notifications