மீண்டும் மத்தியில் காங்கிரஸ் அரசு அமைவது நிச்சயம்: உம்மன்சாண்டி நம்பிக்கை
சென்னை: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி நம்பிக்கைத் தெரிவித்துள்ளாஅர்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, மோடியால் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் பிரச்சினை இருக்காது எனத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, ‘பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்துவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. கடந்த 9 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஏழை, எளிய மக்களுக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். 3-வது முறையாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படும். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் முழு நம்பிக்கையுடன் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர உள்ளன.
பெரும்பான்மையான ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். தமிழக மீனவர்களின் நலனுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் நல்ல தீர்வு கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தரும். முல்லைபெரியாறு அணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை' என இவ்வாறு அவர் கூறினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications