ராகுல் கைதுக்கு கண்டனம்- சென்னையில் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், நக்மா, குஷ்பு ஆர்ப்பாட்டம்
சென்னை: டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குமாரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், குஷ்பூ, நக்மா, உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட ராகுல்காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஐந்தர் மந்தர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.

ராகுல்காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் ஜனநாயக, சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சியினர் மீது அடக்குமுறைகள் நாள்தோறும் ஏவி விடப்படுகின்றன. இந்தப் பின்னணியில் ராகுல்காந்தியை செயல்படவிடாமல் தடுப்பதன் மூலம் எதிர்கட்சிகளின் குரல்வளையை நெரித்து விடலாம் என்று பாஜ கனவு காண்கிறது. அதை தகர்க்கிற வகையில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி இழந்த பின்னர் முதன் முறையாக ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்நாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இங்கு ஜனநாயக விரோத அரசு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய அவர், இது நாடா? அல்லது காடா என்று குற்றம் சாட்டினார். மாதத்தில் 25 நாட்களும் வெளிநாட்டில் இருக்கிறார் மோடி, 5 நாட்கள் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு வந்து சுற்றி பார்க்கின்றனர். இன்னும் இரண்டரை வருடங்களில் இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி அமர்வார் என்று கூறினார்.
மாநில அரசியலுக்கு மாறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் கைநாட்டு ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இங்கே கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றும் அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்று குற்றம் சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications