ராசா தொகுதியில மொத்தம் 16 பேர் தான் வேட்புமனுத் தாக்கல் செஞ்சிருக்காங்களாம்....
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மொத்தம் 1359 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ராமநாதபுரம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 59 பேர் மனு செய்துள்ளனர்.
அதேபோல 4 தொகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்தபட்சமாக நீலகிரி மற்றும் நாகையில் தலா 16 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துளளனர்.
40 தொகுதிகளிலும், தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:

ராமநாதபுரம் தான் டாப்...
ராமநாதபுரத்தில் 59 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் வட சென்னையில் 53 பேரும், அரக்கோணத்தில் 52 பேரும், திருவண்ணாமலையில் 51 பேரும் என 4 நான்கு தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் 46 பேர்....
அதேபோல், தென் சென்னையில் 46 பேரும், மதுரையில் 46 பேரும், தேனியில் 44 பேரும், மத்திய சென்னையில் 43 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேலூரில் 38...
வேலூரில் 38 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 38 பேரும், திருச்சி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தலா 37 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நாமக்கல்லில் 35 பேர்....
மேலும், நாமக்கல் தொகுதியில் 35 பேரும், கோவை, சேலம், கன்னியாகுமரி தொகுதிகளில் தலா 34 பேரும், கள்ளக்குறிச்சியில் 33 பேரும், திருப்பூர், கரூர் தொகுதிகளில் தலா 32 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சிதம்பரத்தில் 31 பேர்....
சிதம்பரத்தில் 31 வேட்பு மனுக்களும், தஞ்சை, பெரம்பலூர், தூத்துக்குடியில் 30 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. அதேபோல், பொள்ளாச்சி, தர்மபுரி தொகுதிகளில் 29 வேட்பு மனுக்களும், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை தொகுதியில் 28 மனுக்களும், ஈரோட்டில் 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆரணியில்....
கடலூர், விழுப்புர தொகுதியில் 26 மனுக்களும், திண்டுக்கல், திருவள்ளூர் தொகுதிகளில் 25 மனுக்களும், காஞ்சீபுரம், ஆரணி தொகுதிகளில் 24 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ராசா தொகுதியில் குறைவான வேட்பாளர்கள்...
ஆரணியில் 24 பேரும், தென்காசியில் 22 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். மிகக் குறைந்த அளவாக நாகை மற்றும் நீலகிரி தொகுதியில் மொத்தம் 16 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
புதுவையில்....
அதேபோல், புதுச்சேரியில் 41 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications