நாமக்கலில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கலில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்து உள்ள நெய்காரன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பிரசாந்த்(19). கட்டிடத் தொழிலாளி. அவர் அணியாபுரத்தில் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். அவர் நேற்று முன்தினம் கட்டிட வேலை செய்ததற்கான கூலியை வாங்க அணியாபுரம் சென்றார். அப்போது ஹக்கீம் அலி(35) என்பவர் தனது 3 வயது மகளுடன் கூலிப் பணம் வாங்க வந்தார்.

கூலியை வாங்கிய பிறகு ஹக்கீம் தனக்கு மற்றொரு இடத்தில் இருந்து வர வேண்டிய கூலியை வாங்கிவிட்டு வருவதாகவும், அதனால் தனது மகளை வீட்டில் விடுமாறும் கூறி சிறுமியை பிரசாந்திடம் கொடுத்துவிட்டு சென்றார்.

மோகனூருக்கு வந்த பிரசாந்த் ஒரு சந்துக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி அழுததால் அவர் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் சிறுமியை வீட்டில் விட்டார். ஆனால் சிறுமி வீட்டில் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவரிடம் பெற்றோர் விசாரிக்க அவர் நடந்தவற்றை தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+