தெய்வ மகள்.... இந்த "ஜவ்வு" தேவையா?.... குமுறும் நேயர்கள்!
தெய்வமகள் சீரியல் 1300 எபிசோடுகளுக்கு மேல் கடந்து விட்டது. காயத்ரி சாகவில்லை என்று உறுதியாகிவிட்டது. ஆனாலும் சீரியலை எப்போது முடிப்பார்கள் என்றே கேட்கத் தொடங்கிவிட்டனர்.
சென்னை: 5 ஆண்டுகளாக ஒரு சீரியலை ஜவ்விழுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வமகள் எப்படா முடியும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் சீரியல் ரசிகர்கள்.
சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தெய்வமகள் தொடர்தான் இப்போது ரசிகர்களின் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்து வருகிறது.
பிரகாஷ் - சத்யாவின் மகள் கடத்தல், காயத்ரி மாயம் என கதை இவர்களை சுற்றியே பின்னப்படுகிறது. சுவாரஸ்யமாக எதுவும் இல்லை புது வில்லி தவிர. அதுவும் பிரகாஷ்க்கு எதிராக அந்த பச்சைப்புள்ளை களமிறக்கியிருக்கிறார்கள்.

மகா பாப்பா
சத்யாவிற்கு பிறந்த குழந்தையை கடத்தி பிச்சைக்காரியிடம் கொடுக்க அதை அவள் விற்றுவிட அந்த குழந்தை உறவினர் வீட்டிலேயே வளர்கிறது. அதை பக்கத்தில் வைத்துக்கொண்டே தேடுகின்றனர் பிரகாஷ் குடும்பத்தினர்.

காயத்ரிக்கு சிகிச்சை
பிரகாஷ் கையால் குத்துப்பட்ட காயத்ரியை கொண்டு போய் நாகர்கோவிலில் தலைமறைவாக வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

புது வில்லி வேறயா?
காலேஜில் படிக்கும் போது பிரகாஷ் காதலித்த பெண் இப்போது வில்லியாக வந்து பிரகாஷை ஆட்டி வைக்கிறார். பழிவாங்குகிறேன் பேர்வழி என்று அந்த பெண் செய்யும் அட்டகாசம் அப்பப்பா...

மந்த்ரா - காயத்ரி
காயத்ரிதான் காணோம் மந்த்ரா வடிவில் வந்து பிரகாஷ் உடன் வில்லத்தனம் செய்கிறார். ஆனால் இதுவும் கதையோடு ஒட்டவில்லை. பிணத்தை பார்க்காமலேயே கொலையாளி என்று முடிவு செய்து அடிப்பது என்னதான் நியாயம் என்கின்றனர்.

எப்போதான் முடிவுக்கு வரும்
காயத்ரியை கட்டிலில் படுக்கப் போட்டிருப்பது, குழந்தையை தேடுவது என ஒரே போர் சமாச்சாரங்களினால் சீரியல் அதிகமாகவே டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் எப்போது சீரியல் முடிவுக்கு வரும் என்று கேட்கத் தொடங்கி விட்டனர் சீரியல் ரசிகர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications