இத்தாத்தண்டி கண்டெய்னர் எப்படிப்பா பாலத்துக்குக் கீழே போகும்..??
சென்னை: சென்னையில் ராட்சத கண்டெய்னர் லாரி ஒன்று பாலம் மீது மோதி மேற்கொண்டு போக முடியாமல் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கி எதிரே சப்வே உள்ளது. அதற்கு மேலே ரயில்வே மற்றும் சாலைப் பாலம் உள்ளது.

இன்று காலை இந்த சப்வே வழியாக துறைமுகம் செல்வதற்காக ஒரு ராட்சத கண்டெய்னரை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னர் மிகவும் உயரமாக இருந்ததால் பாலத்தின் வழியாக போக முடியாமல் இடித்து விட்டது.
இதில் கண்டெய்னரின் முன்பக்கம் லேசான சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பாலத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கண்டெய்னர் லாரி பாலத்தில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர் கண்டெய்னர் கவிழ்ந்து விடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தனர். பின்னர் அந்த கண்டெய்னரை அகற்றி லாரியை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications