'தாலி அகற்று விழா'- கி. வீரமணி அறிவிப்பு! வரிந்து கட்டி எதிர்க்கும் 'தமிழ்த் தேசிய' வலைவாசிகள்!!
சென்னை: தமிழகத்தில் இப்போது அரசியல் விவாதங்களை விட பிரதானமாக ஓடிக் கொண்டிருப்பது 'தாலி' பற்றியதுதான்.. அதுவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ஏப்ரல் 14-ந் தேதியன்று 'தாலி அகற்றும் விழா'வை நடத்துவோம் என்று அறிவிக்கப் போக தமிழ்த் தேசிய வலைவாசிகளோ அதெப்படி இப்படி அறிவிக்கலாம் என வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெண்களுக்கு தாலி பெருமையா? சிறுமையா? என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. அதை ஒளிபரப்பப் போவதாக முன்னோட்டங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

அந்த முன்னோட்ட விளம்பரங்களில் சில பெண்கள் தாலிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஒரு சில இந்து அமைப்புகள் புதிய தலைமுறைக்கு எதிராக போராடத் தொடங்கின. இதனால் அந்நிகழ்ச்சியையே ஒளிபரப்புவதை புதிய தலைமுறை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் திடீரென புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது அணுகுண்டு பட்டாசுகள் அடங்கிய டிபன் பாக்ஸை ஒரு கும்பல் வீசிவிட்டு செல்ல பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்துசேனா என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற கி. வீரமணி, ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தந்தைபெரியார் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காயமாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்குகிறோம் என்று சொல்லி மேடைகளிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றனவே.

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலே எங்கள் சகோதரிகளை எல்லாம் நீங்கள் அவமானப்படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின்றீர்கள்.
இதைவிடக் கொடுமை வேறு என்ன? தாலி புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவதற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.
இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா? என்றார் வீரமணி.
வீரமணியின் இந்த அறிவிப்பையடுத்து தமிழ்த் தேசியம் பேசுவோர் உள்பட பலரும் 'தாலி புனிதமானது.. தமிழர் பண்பாட்டுக்குரியது' என்று.. அதை எப்படி அறுக்கலாம் என சொல்வீர்கள் என கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரத்தில் தாலி அகற்றும் நிகழ்வு என்பது 80 ஆண்டு கால திராவிடர் இயக்க மேடைகளில் நடத்தப்படுவதுதான்.. இன எதிரிகள் எதிர்ப்பதற்கு பதில் அவர்களது அடிமைகள் எதிர்த்து நல்ல விளம்பரம் தேடித் தருகிறார்கள் என்றும் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் கி. வீரமணி ஆதரவாளர்கள்..
இன்னும் ஒரு மாதத்துக்கு 'தாலி அகற்றுதல்'தான் ஹை டாபிக் போல!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications