தீபாவளி சோகம்: கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சமையல்காரர் மரணம்
சேலம்: தீபாவளிப் பண்டிகைக்காக பலகாரம் சுடும் போது கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சமையல்காரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிகிராஸ் திருமண மண்டபத்தில், மேட்டூரை சேர்ந்த சமையல் குழுவினர் தீபாவளி பண்டிகைக்காக "ஸ்வீட் மற்றும் காரம்" தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த, 27-ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், கரடிகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த சமையல்காரர் ஞானவேல்,வயது-30, என்பவர் மேட்டூர் வந்துள்ளார். மண்டபத்தில் இருந்த சமையல் குழுவினருடன் சேர்ந்து ஸ்வீட் தயாரித்து கொண்டிருந்தார்.
அப்போது, சமையல் பொருட்களை எடுப்பதற்காக ஞானவேல் அருகிலுள்ள அறைக்கு சென்றார். அப்போது, தரையில் சிதறியிருந்த எண்ணையில் கால்பட்டதால் வழுக்கி விழுந்துவிட்டார்.
எதிர்பாராத விதமாக அருகே ஸ்வீட் போடுவதற்காக அடுப்பில் கொதித்து கொண்டிருந்த எண்ணை சட்டியின் மேல் ஞானவேல் விழுந்துவிட்டார். சட்டியில் கொதித்து கொண்டிருந்த என்னை ஞானவேல் உடலில் கொட்டியது. கொதிக்கும் எண்ணையில் சிக்கிய ஞானவேல் உடல் வெந்து துடித்த நிலையில், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications