மதுரையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பரிதாப பலி!
மதுரை: மதுரையில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்வதனால் விஷவாயு தாக்கி உயிரிழப்பது தொடர்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக சோலை நாராயணன் என்பவர் பணியாற்றி வந்தார். துப்புரவு தொழிலாளியான சோலை நாராயணன் அடுக்குமாடி கட்டடத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மேலக்கால் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சோலை நாராயணன் சுத்தம் கொண்டிருந்தார். அப்போது, அந்த கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக திடீரென விஷவாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனை சுவாசித்த நாராயணன் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கழிவுநீர் தொட்டியில் இருந்து சோலை நாராயணன் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷவாயு தாக்கி ஊழியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இதனை தடுக்க அரசு உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications