ஸ்ரீரங்கத்தில் 9,000 போலி வாக்காளர்கள்... நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் கோர்ட்டில் உத்தரவாதம்!
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் பலமுறை இடம் பெற்றுள்ள 9 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் என்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில் அவர், கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் நான் போட்டியிடுகிறேன். இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து தி.மு.க. சார்பில் கடந்த நவம்பர் 5-ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 5-ந் தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அந்த பட்டியலிலும், ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு முகவரியில், பலமுறை இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் என்று வாக்காளர்கள் கொடுத்த முகவரி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பெயரும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயரும், வாக்கு அளிக்க தகுதியில்லாதவர்களின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு, அந்த வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் உள்ளது. எனவே, பல முறை இடம் பெற்றுள்ள மற்றும் இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் திரும்ப பெறும் கடைசி நாள் முடிந்த பிறகு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் எதுவும் செய்ய முடியாது என்றும் அதேநேரம், வீட்டில் இல்லாதவர்கள், வேறு முகவரிக்கு மாறியவர்கள், இறந்தவர்கள் ஆகியோரது பெயர் விவரங்களை கொண்ட (ஏ.எஸ்.டி.) பட்டியலை வெளியிடும்போது, மனுதாரரின் கோரிக்கைகளையும் சேர்த்து பரிசீலிக்கப்படும்' என்று வாதிட்டார்.
ஆனால், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘ஏ.எஸ்.டி. பட்டியல் என்பது வேறு. வாக்காளர் பட்டியலில் பலமுறை இடம் பெற்றுள்ள பெயர்களை நீக்கும் பணி என்பது வேறு. எனவே, பலமுறை பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர் பட்டியலைத்தான் சரி செய்யவேண்டும்' என்று வாதிட்டார்.
அதற்கு தேர்தல் ஆணையம் வக்கீல், ‘சரியான வாக்காளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை நாங்கள் பதிவு செய்துக் கொள்கிறோம்.
2 நாட்களுக்குள்...
இந்த பணிகளை எல்லாம் தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். பின்னர், அந்த விவர பட்டியலை வாக்குப்பதிவு மையங்கள், வாக்குப்பதிவு மையத்தின் முகவர்களுக்கு ஆகியோருக்கு வழங்கவேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications