லிப்ட் கேட்ட பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… ஆட்டோ டிரைவர் கைது
திண்டுக்கல்: தாலிகட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவரது மனைவி மனோன்மணி (32). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் தனக்கு சொந்தமான லோடு ஆட்டோ மற்றும் வேனை வாடகைக்கு விட்டுள்ளார்.
லோடு ஆட்டோவை அவரே ஓட்டி வந்தார். வேனை மற்றொருவர் ஓட்டுகிறார். ரமேஷ் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருபவர் ரத்தினம். இவரது மனைவி ராஜதேவி (32). அந்த பகுதியில் உள்ள மில்லில் ராஜதேவி வேலைபார்த்து வருகிறார். தினமும் காலையில் ராஜதேவி வேலைக்கு புறப்பட்டுச் செல்வார்.
அப்போது ரமேஷ் அந்த வழியாக லோடு ஆட்டோவை ஓட்டி வருவார். ராஜதேவி லிப்ட் கேட்டு அதில் ஏறிக்கொள்வார். ரமேசும் மில்லுக்கு செல்லும் மெயின் ரோட்டில் அவரை இறக்கி விடுவார்.
தினமும் ரமேஷ் ஆட்டோவில் ராஜதேவி லிப்ட் கேட்டுச்செல்வது ரத்தினத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியுடன் சண்டை போடவே அதை ரமேசிடம் ராஜதேவி கூறினார்.
சந்தேகத்தை நாம் உண்மையாக்கி விடுவோம் என்று கூறி ராஜதேவியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் ரமேஷ். இருவரும் சொந்த ஊரை விட்டு கடந்த வாரம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிபெயர்ந்தனர்.
அங்கு வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர். அங்கிருந்தபடியே ரமேஷ் ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் சென்று வந்தார்.
கணவரை ஒருவாரமாக காணாததால் மனோன்மணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரமேஷ் நான் ஒட்டன்சத்திரத்தில் ராஜதேவியுடன் குடும்பம் நடத்துகிறேன். இனி நீ என்னை மறந்து விடு என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். பின்னர் மனோன்மணியை அழைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் சென்றார். அங்கு சென்று ரமேசிடம் விசாரித்த போது ராஜதேவி ஆத்திரம் அடைந்தார்.
‘இனிமேல் ரமேஷ் எனக்குத்தான். நீ இங்கிருந்து இடத்தை காலி செய். இல்லையேல் உன்னை கொலை செய்து விடுவேன்' என்று மனோன்மணியை மிரட்டினார். போலீஸ் இருக்கும் போதே இப்படி மிரட்டுகிறாயா? என்று ராஜதேவியை போலீசார் கடுமையாக எச்சரித்ததோடு அவரை கைது செய்தனர்.
மனைவி இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய குற்றத்துக்காக ரமேசையும் கைது செய்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications