சிதம்பரம் அருகே கணவன்- மனைவி தற்கொலை! வீடியோ காலில் நடந்தது என்ன?
சிதம்பரம்: சிங்கப்பூரில் வேலை செய்து வரும் கணவரிடம் வீடியோ காலில் பேசிய மனைவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கணவரும் சிங்கப்பூரில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தகுறிச்சி பகுதியை சேர்ந்த கவுரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 4 வயதிலும் 2 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவாராம். அப்போதெல்லாம் சண்டையிட்டுக் கொண்டேதான் இருப்பார் என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கவுரி அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கவுரி, தனது கணவர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தாராம்.
இதையடுத்து நேற்று , தனது தங்கையிடமும் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனது தந்தையிடமும் வீடியோ காலில் கவுரி பேசியதாக தெரிகிறது. அவர்களிடம் பேசிவிட்டு தனது கணவருடனும் வீடியோ காலில் பேசியுள்ளார்.

பின்னர் பேசி முடித்த சில மணி நேரங்களில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த குழந்தைகள் அழுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கவுரி, தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து கணவர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர் செல்வம், அங்கே ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கவுரியின் உறவினர்கள் கூறுகையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடக்கும். இதனால் கவுரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். நேற்றைய தினம் என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றும் தெரியவில்லை. தற்போது இரு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பன்னீர் செல்வத்தின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications