சென்னையில் செல்போன் வெடித்து தம்பதி பலி- மகன் உயிர் ஊசல்!
சென்னை: சென்னையில் செல்போன் வெடித்து தீயில் கருகிய கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியாகினர். அவர்களுடைய மகன் உயிருக்கு போராடி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நேற்று முன்தினம் இரவு மனைவி ராணி, மகன் தினேஷ் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தினேஷ் அதிகாலை 5 மணிக்கு எழும்புவதற்காக செல்போனில் அலாரம் செட் செய்து வைத்திருந்தார். அப்படியே செல்போனை படுக்கை அறையில் உள்ள மெத்தையில் வைத்து சார்ஜ் போட்டு விட்டு தூங்குவதற்கு சென்றார்.

வெடித்துச் சிதறிய செல்போன்:
நேற்று அதிகாலை 5 மணி அளவில் செல்போனில் அலாரம் அடித்தது. அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது செல்போனும் தீப்பிடித்து எரிந்தது. செல்போன் வைக்கப்பட்டிருந்த மெத்தையிலும் தீப் பிடித்தது.

எழுந்து ஓடிய குடும்பம்:
கண் இமைக்கும் நேரத்தில் இந்த தீ மளமளவென கட்டிலுக்கும் பரவி வீடு முழுக்க பற்றியது. இதனால் ராஜேந்திரன், ராணி, தினேஷ் ஆகிய 3 பேரும் அலறியடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்தனர். அவர்களால் வெளியில் ஓட முடியவில்லை. 3 பேரின் உடலிலும் தீ பற்றியது. வீட்டுக்குள்ளேயே தீயில் சிக்கிய ராஜேந்திரன், ராணி, தினேஷ் ஆகிய 3 பேரும் உடல் கருகினர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்:
இது பற்றி தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் ராஜேந்திரன் தீக்காயங்களுடன் உயிர் தப்புவதற்காக ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியில் வந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதல் உதவி செய்தனர். ராணியையும், அவரது மகன் தினேசையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

தாய், தந்தை இருவரும் உயிரிழப்பு:
3 பேரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் நேற்று நள்ளிரவில் ராஜேந்திரனும், இன்று அதிகாலையில் ராணியும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தினேஷ் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேஸ் கசிவு காரணமா?:
நேற்று முன்தினம் இரவில் வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டிருந்ததாகவும் அப்போது செல்போனில் அலாரம் அடித்ததால் வீட்டில் தீப்பிடித்தாகவும் கூறப்பட்டது. இதனை ராஜேந்திரனின் உறவினர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவரது தம்பி சுரேஷ் கூறும்போது, "செல்போன் வெடித்தே தீ விபத்து ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications