For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசதுரோக வழக்கில் வைகோ விடுதலை- சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்தது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

Chennai court discharges Vaiko in sedition case

அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை 3-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வைகோ ஆஜராகி இருந்தார். அப்போது, அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்தார். இதன்பின்னர் இருதரப்பு இறுதிகட்ட வாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து வைகோ விடுதலை செய்யப்படுவதாக செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

English summary
The Chennai sessions court today discharged MDMK General Secretary Vaiko in a sedition case. Vaiko was arrested in 2008 for his anti-national speeches during a debate on the situation in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X