சொத்துத் தகராறு: நடிகை மனோரமாவின் பேத்தி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: நடிகை மனோரமா சொத்து தொடர்பாக அவரின் பேரன் மீது பேத்தி தொடர்ந்த வழக்கில் மனோரமா, அவரது மகன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெறும் நடிகை மனோரமா ஆங்காங்கே சில அசையா சொத்துக்களை வாங்கி போட்டிருக்கிறார். இதனை கைப்பற்ற அவரது ரத்த சொந்தங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் அவரோ உடல்நல பாதிப்பில் தவிக்கிறார்.

சமீபத்தில் அவரது அண்ணன் மருமகள் போட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது பேத்தி வழக்கு போட்டிருக்கிறார்.
மனோரமாவின் ஒரே மகன் பூபதி. அவரது மகள் பி.அபிராமி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில்,
எனது பாட்டி மனோரமா பிரபலமான நடிகை. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அவருக்கு சொத்து உள்ளது. தற்போது மனோரமா உடல் நலம் பாதிக்கப்பட்டு மிக சீரியஸான நிலையில் உள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்று அவருக்கு தெரியாத நிலை உள்ளது. எனது தந்தை பூபதி மதுவுக்கு அடிமையாகி சுய நினைவில்லாமல் இருக்கிறார். அவர்கள், தியாகராயநகரில் உள்ள வீட்டில் தற்போது இருக்கிறார்கள்.
இந்நிலையில், இருவரின் உடல் நலக்குறைவை தனக்கு சாதகமாக பயன்படுத்திய எனது அண்ணனான டாக்டர் ராஜராஜன், எனது பாட்டியின் பல அசையா சொத்துக்களை தனது பெயருக்கு விற்பனை பத்திரம் செய்து கொண்டார்.சட்ட விதிகளுக்கு முரணாக அவர் சொத்துக்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் துணையுடன் விற்பனை ஒப்பந்த பத்திரத்தை மனோரமா வீட்டில் வைத்தே பதிவு செய்துள்ளனர். இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. இந்த பத்திரப் பதிவு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிகளின்படி எங்களுக்கு சம பங்கு தரப்பட வேண்டும். ஆனால், சட்ட விதிகளுக்கு முரணாக எங்களுக்கு தெரியாமல் சொத்துக்களை ராஜராஜன் அபகரித்துவிட்டார். இது தொடர்பாக கடந்த மே 6ம் தேதி ராஜராஜனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர் மனோரமாவின் பெயருக்கு பதில் அளித்தார். மனோரமாவால் எதுவும் செய்ய முடியாத நிலையில் ராஜராஜனின் நோட்டீசுக்கு பதில் தர முடியவில்லை.
இந்நிலையில், சொத்துக்களை விற்பனை செய்ய ராஜராஜன் முயற்சி செய்து வருகிறார். பல நில புரோக்கர்கள் மனோரமாவின் சொத்துக்களை பார்வையிட்டு வருகிறார்கள். இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். எனவே, மனோரமாவின் சொத்துக்களை ராஜராஜன் பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிட வேண்டும். ராஜராஜனோ அல்லது அவரது ஆட்களோ மனோரமாவின் சொத்துகள் மீது உரிமை கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு 5வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமிகாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது மனோரமா, அவரது மகன் பூபதி, அவரது மனைவி தனலட்சுமி, பேரன் ராஜராஜன், பேத்தி மீனாட்சி உள்ளிட்டோர் வரும் 22ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications