கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
மதுரை: கொம்பன் படத்தை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஓய்வு பெற்ற இரு நீதிபதிகளுக்கு திரையிட்டுக் காட்டுமாறும், அவர்கள் கருத்தைக் கேட்ட பிறகு நாளை தீர்ப்பு கூறுவதாகவும் நீதிபதி தமிழ்வாணன் உத்தரவிட்டார்.
கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதை மற்றும் தலைப்பு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிடுவதாகவும், இந்தப் படம் வெளியானால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், இப்படத்தை தடை செய்ய செய்யக்கோரி கிருஷ்ணசாமி மதுரை நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்பம் வெளியானால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்படும்''என்று தெரிவித்தார்.
ஆனால் அரசுத் தரப்பு இதனை மறுக்க, சாதிக் கலவரம் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் தர முடியுமா என்று நீதிபதி கேட்க, அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினர் மவுனம் சாதித்தனர்.
பிற்பகலுக்குப் பிறகு இந்த வழக்கை மீண்டும் விசாரித்தார் நீதிபதி. அப்போது படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து நீதிபதி, வழக்கு தொடுத்த கிருஷ்ணசாமிக்கு படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். அவருடன் மேலும் இரு ஓய்வு பெற்ற நீதிபதிகளும் பார்ப்பார்கள். அவர் படத்தைப் பார்த்துவிட்டு பதில் சொன்ன பிறகு, தீர்ப்பு கூறுகிறேன்," என்று கூறி ஒத்திவைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications