ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜன.18-ல் நேரில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆரம்ப கட்ட் முகாந்திரம் இருப்பதால் ஜனவரி 18-ந் தேதியன்று தி.மு.க. தலைவரும் முரசொலி நாளிதழ் ஆசிரியருமான கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி மீது சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம். எல். ஜெகன் அண்மையில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், நவம்பர் 21-ந் தேதியிட்ட முரசொலி நாளிதழில் "கலைஞரின் கேள்வி பதில்" என்ற பகுதியில் 4 ஆண்டு ஆட்சியில் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் தமிழக அரசு பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் உண்மைக்கு மாறாக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறான தகவல்களை தெரிவித்துள்ளார் அதன் ஆசிரியரான கருணாநிதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதால், இதுகுறித்து ஜனவரி 18-ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க முரசொலி ஆசிரியரான கருணாநிதி, முரசொலி செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனந்த விகடன் ஆசிரியருக்கும் உத்தரவு
இதேபோன்று, ஆனந்த விகடனுக்கு எதிரான அவதூறு வழக்கில், அப்பத்திரிகை ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் பிப்ரவரி 1-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications