அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கில் நித்தியானந்தா ஆஜராக கோவை கோர்ட் உத்தரவு!
கோயம்புத்தூர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா நேரில் ஆஜராக கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி வேற்று மதத்தை சார்ந்தவர். தனது மனைவியை இந்து மதத்தை சேர்ந்தவராக தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் எப்படி இந்து மதத்தை காப்பாற்றுவார் என பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைர் அர்ஜூன் சம்பத் கோவை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதி ரேணுகா முன்பு விசாரணைக்கு வந்தது.

அர்ஜூன் சம்பத் தரப்பில் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதி ரேணுகா வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதால் நித்தியானந்தா வருகிற செப்டம்பர் 3-ந் தேதியன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
கடந்த திங்கள்கிழமைதான் சாமியார் நித்யானந்தாவை கைது செய்து ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என கர்நாடகாவின் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கில் கைது செய்ய போலீஸாருக்கு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications