குற்றாலத்தில் பலத்த மழை.. அருவிகளில் குளிக்கத் தடை
Subscribe to Oneindia Tamil
தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகமே ஈரமாகிக் கிடக்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்ளாக மழை பெய்து வருவதால் நகரமே நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் குற்றாலத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு காரணமாக வளைவைத் தாண்டி தண்ணீர் விழுவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications