ஜல்லிக்கட்டுக்கு தடை... தமிழர்களின் பண்பாட்டை குலைக்கும் பாஜகவின் சதி... முத்தரசன் விளாசல்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது தமிழர்களின் பண்பாட்டை குலைக்கு பாஜகவின் சதிச் செயல் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சிபிஐயின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் நடிகர் சத்யராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் மாலையில் முடிவடைந்த நிலையில், மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதில் பங்கேற்கும். தமிழர்களின் பண்பாட்டை குலைக்கும் சதியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், நாட்டு மாடுகள் இனத்தை அழிக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார்.
இன்று தலைநகர் சென்னையில், கம்யூனிஸ்ட்கள் உண்ணாவிரதம், மாணவர்கள் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு, பாஜக அலுவலகம் முற்றுகை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் போராட்டம் என பல போராட்டங்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்றன.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications