மான உணர்ச்சி இருக்கும் எந்தத் தமிழனும் ராம் நாத்துக்கு ஓட்டு போடக் கூடாது.. தா. பாண்டியன் ஆவேசம்
மான உணர்ச்சி இருக்கும் எந்தத் தமிழனும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓட்டு போடக் கூடாது என்ற தா. பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துவை மான உணர்ச்சி உள்ள எந்தத் தமிழனும் ஆதரித்து ஓட்டு போடக் கூடாது என்று சிபிஐ மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது.

கடும் எதிர்ப்பு
ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா முழுவதில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் பாஜக ஒருமித்த கருத்து எட்டுவதில் இருந்து தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மம்தா அட்டாக்
இதே போன்று பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராம் நாத் கோவிந்த்தை விட பெரிய தலித் தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தலித் என்பதால் கொண்டாட முடியாது
இதே போன்று தமிழகத்தில் திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் தலையில் வைத்து கொண்டாட முடியாது என்றும், அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும் கடுமை சாடியுள்ளார்.

மானமிருந்தால் ஓட்டு போடாதீங்க
இந்நிலையில், சிபிஐ மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மான உணர்ச்சி உள்ள எந்தத் தமிழனும் பாஜக அறிவித்துள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஓட்டு போடக் கூடாது என்று ஆவேசமாகக் கூறினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதியாக வரக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications