செல்லாத ரூபாய் நோட்டு: இந்தியன் வங்கி முன் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
மோடி அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கண்டித்து சென்னையில் இந்தியன் வங்கி முன் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. வங்கிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள இந்தியன் வங்கி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதது என்று பிரதமர் மோடி அறிவித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் வங்கியில், பண பரிவர்த்தணை செய்ய வந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications