திரிபுராவில் பாஜகவிற்கு வெற்றியல்ல வாரி இறைத்த பணத்திற்கு தான் வெற்றி... பாலகிருஷ்ணன்!
திரிபுராவில் பாஜகவிற்கு வெற்றியில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை : திரிபுராவில் பாஜக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி அவர்களுக்கான வெற்றியல்ல அவர்கள் வாரி இறைத்திருக்கும் பணத்திற்கு கிடைத்த வெற்றி என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் கருத்துகணிப்புகளை உண்மையாக்கியுள்ளன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 40 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றதால் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. பாஜகவின் இந்த வெற்றியை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பது இடதுசாரி அமைப்புகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய அமைச்சரவை முழுவதுமே திரிபுராவில் முகாமிட்டு தேர்தல் வேலை செய்ததாக தெரிவித்தார்.
பல நூறு கோடி ரூபாயை கொட்டி பாஜக திரிபுராவில் வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றியல்ல பணத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications