For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் பிரச்சினை... ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்று ஜி.ராமகிருஷ்ணன் கைது

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

CPI(M)state secretary G.Ramakrishnan arrested in Chennai

ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். சென்னை பாரிமுனையில் ரிசர்வ் வங்கி அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

English summary
CPI (M) state secretary G.Ramakrishnan arrested near Reserve bank of India in Chennai.Currency of Rs. 500 and Rs.1,000 ceased to be legal tender from midnight on November 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X