சட்டசபையில் மதுவிலக்கு குறித்து தனித் தீர்மானம்- இ. கம்யூ. எம்.எல்.ஏ. ஆறுமுகம் நோட்டீஸ்
சென்னை: தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத் தொடரில் மதுவிலக்கு குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்திருந்தார்.

பின்னர் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இன்றைய சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. ஆறுமுகம் கூறுகையில், மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது சரியானது அல்ல; நாளை கூட ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கலாம் என்றார்.
மேலும் அப்துல் கலாம் இரங்கல் தீர்மானத்தின் மீது பேச தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாதது வருத்தமளிப்பதாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, ஜவாஹிருல்லா ஆகியோர் தெரிவித்தார்.
நடப்பு கூட்டத் தொடரில் மதுவிலக்கு பிரச்சனையை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications